தேவகோட்டை இரட்டைக்கொலை வழக்கு: சி.சி.டி.வி. கேமரா ஹார்டு டிஸ்க்கை மாற்றிய 2 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள்-போலீஸ்காரர்-3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்த முடிவு
தேவகோட்டை இரட்டைக்கொலை வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு தெரியாமல் சி.சி.டி.வி. கேமரா ஹார்டு டிஸ்க்கை போலீஸ்காரர் மற்றும் 2 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. அவர்களிடம் விசாரிக்க உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தேவகோட்டை

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இரட்டைக்கொலை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை கிராமத்தில் தாய், மகள் ஆகியோரை படுகொலை செய்து வீட்டில் இருந்த வெள்ளி பொருட்கள், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் 13 வயது சிறுவனை தாக்கி விட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை நேரடி கண்காணிப்பில், காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மேற்பார்வையில் தனிப்படையினர் விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்தனர். இதற்கிைடயே திடீர் திருப்பமாக போலீஸ்காரர் ஒருவரின் கார் இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த போலீஸ்காரருக்கு சம்மன் அனுப்பி தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரித்தார்.
ஹார்டு டிஸ்க் மாற்றம்
இந்தநிலையில் நகர் போலீஸ் நிலையம் எதிரே ஆதிபராசக்தி கோவிலில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ய இருந்தனர். இதற்கிடையே அந்த போலீஸ்காரர் மற்றும் 2 பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் அந்த கோவிலுக்கு சென்று பதிவாகி இருந்த சி.சி.டி.வி. ஹார்டு டிஸ்க்கை எடுத்துக்கொண்டு வேறு ஒரு டிஸ்க்கை கொடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இது போலீஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் எதற்காக இந்த ஹார்டு டிஸ்க்கை எடுக்க வேண்டும்? தடயங்களை அழிக்கவா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தேவகோட்டை இரட்டைக்கொலை வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு தெரியாமல் சி.சி.டி.வி. கேமரா ஹார்டு டிஸ்க்கை போலீஸ்காரர் மற்றும் 2 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. அவர்களிடம் விசாரிக்க உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மேலும், அந்த போலீஸ்காரரையும், 2 பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களையும் உயர் அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொலை விசாரணை தொடங்கியதிலிருந்து விசாரணை அதிகாரிகளை திசை திருப்பிக்கொண்டே வந்துள்ளனர். தற்போது விசாரணை தீவிரமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.