தேவகோட்டை நகராட்சி கூட்டம்


தேவகோட்டை நகராட்சி கூட்டம்
x

தேவகோட்டை நகர்மன்ற அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது.

சிவகங்கை

தேவகோட்டை,

தேவகோட்டை நகர்மன்ற அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் கா.சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரமேஷ், ஆணையாளர் சாந்தி, நகராட்சி பொறியாளர் மதுசூதனன், மேலாளர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேவகோட்டை நகராட்சி சொத்துவரி, காலிமனை வரி, சீராய்வு மற்றும் புதிய மண்டல அடிப்படை மதிப்பு நிர்ணயத்தில் வரிவிதிப்பு ஏற்படுத்துவதற்கு மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரி உயர்வு தொடர்பான விவாதங்கள் நடந்தது. இது ெதாடர்பாக தலைவர் பேசும் போது, அரசு வரி உயர்வு சம்பந்தமாக அனைத்து வேலைகளையும் முடித்து நகர் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு அனுப்பி வைத்துள்ளது.

எனவே இந்த வரி உயர்வால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு நிரந்தரமாக தீர்வு காண அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு பின்னர் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பொது மக்கள் பாதிக்காத வண்ணம் வரி உயர்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதன் பின்னர் அந்த அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story