தேவபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு


தேவூர் தேவபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

தேவூர் தேவபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேவபுரீஸ்வரர் கோவில்

கீழ்வேளூர் அருகே தேவூரில் மதுரபாஷிணி அம்மன் சமேத தேவபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கி.பி.4-ம் நூற்றாண்டில் கோட்செங்கசோழனால் கட்டிய மாடக்கோவில்களில் இதுவும் ஒன்று. இக்கோவில் நாயன்மார்கள் நால்வர்களால் பாடல் பெற்றது. கள்வாழையை தலைவிரிச்சமாக கொண்டது தலம். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

குடமுழுக்கு

திருப்பணிகள் முடிந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு தேவபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று காலை யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாகுதி நடந்தது.

பின்னர் கடங்கள் புறப்பாடாகி கோவில் ராஜகோபுர கலசம் மற்றும் மூலவர் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பக்தர்கள் சாமி தரிசனம்

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கோவில் நிர்வாகத்தினர், ஊராட்சி தலைவர் வைதேகி ராசு, உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம வாசிகள், விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story