தேவரின் தங்கக்கவசம் மீண்டும் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டது
பசும்பொன்னில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தேவரின் தங்கக் கவசம் எடு்த்து வரப்பட்டு, மதுரையில் உள்ள வங்கி லாக்கரில் வைக்கப்பட்டது.
கமுதி,
பசும்பொன்னில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தேவரின் தங்கக்கவசம் எடு்த்து வரப்பட்டு, மதுரையில் உள்ள வங்கி லாக்கரில் வைக்கப்பட்டது.
தேவரின் தங்கக்கவசம்
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா நடந்தது. அரசு சார்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது தேவர் ஜெயந்தி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து அங்கிருந்து தங்கக்கவசம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கிக்கு கொண்டு வரப்பட்டது.
வங்கி லாக்கர்
தங்க கவசத்துடன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் காந்தி மீனாள் நடராஜன், பழனி தங்கவேல், சத்தியமூர்த்தி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனர். இவர்கள் மதுரை மாவட்ட வருவாய் துறை அலுவலர் சக்திவேலிடம் தங்கக்கவசத்தை ஒப்படைத்து அதன் பின்னர் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. வங்கி அதிகாரிகள் தங்கக்கவசத்தை லாக்கரில் வைத்தனர்.