வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்


வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2023 12:15 AM IST (Updated: 15 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வு குழுக்கூட்டம் ராமநாதபுரத்தில் அதன் தலைவர் நவாஸ்கனி எம்.பி. தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ராம.கருமாணிக்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திசைவீரன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அந்தந்த துறை அலுவலர்கள் விளக்கி கூறினர். கூட்டத்தில் நவாஸ்கனி எம்.பி. பேசியதாவது:- பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் கூடுதலாக சாலை பணிகளை அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமுதாய கழிப்பறைகள் அமைக்க வேண்டும். அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் போன்ற பணிகளை சிறப்பு கவனம் எடுத்து தேர்வு செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்ட பயிற்சியில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். புதிய குடிநீர் திட்டப்பணிகள் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு பேசினார்.

இதில் ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பிரபாகரன், யூனியன் தலைவர்கள், நகர் மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story