வளர்ச்சி திட்ட பணிகள்
மல்லாங்கிணறு பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
காரியாபட்டி,
மல்லாங்கிணறு பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
பூமி பூஜை
மல்லாங்கிணறு பேரூராட்சியில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கு ரூ.2 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜையை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
மல்லாங்கிணறு பேரூராட்சி சின்னகுளம் ஊரணி ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு பொதுமக்கள் நடை பயணம் செய்யும் அளவிற்கு மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பாடு செய்யப்பட்ட ஊருணியை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். மேலும் மல்லாங்கிணறில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டிடத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அமைச்சா் ஆய்வு
அந்த பள்ளிக்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் செலவில் டெஸ்க், பெஞ்ச் வழங்கப்பட்டதையும் பார்வையிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன், பேரூராட்சி செயலாளர்கள் அன்பழகன், காரியாபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், பேரூராட்சி தலைவர்கள் துளசிதாஸ், செந்தில், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ் (எ) ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் மல்லாங்கிணறு பேரூராட்சி துணைத் தலைவர் மிக்கேல்லம்மாள், பேரூராட்சி பொறியாளர் கணேசன், காரியாபட்டி ஒன்றிய கவுன்சிலர் அரசகுளம் சேகர், வக்கீல் பாலச்சந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் குருசாமி, கந்தசாமி, மல்லாங்கிணறு பேரூராட்சி கவுன்சிலர்கள் கருப்பையா, உதயச்செல்வி, செல்லம்மாள், அழகுராஜா, அனிதா சுரேஷ், புகழேந்திரன், ராஜேஸ்வரி, சுமதி சந்திரன், வைஷ்ணவி, செல்வராஜ், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.