வளர்ச்சி திட்ட பணிகள்
வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட திட்ட அலுவலர் திலகவதி நேரில் ஆய்வு செய்தார். மேல ஒட்டம்பட்டியில் அங்கன்வாடி மையம் மற்றும் சமையல் அறை கட்டிடம், தொடக்கப்பள்ளி கட்டிட புனரமைப்பு பணிகளையும் அவர் பார்வையிட்டார். தாயில்பட்டியில் பாரத பிரதமர் வீடுகள் கட்டும் திட்டத்தில் நடைபெறும் பணிகள் மற்றும் பேவர் பிளாக் சாலை, மடத்துப்பட்டி ஊராட்சியில் உறிஞ்சு குழிகள் உள்ளிட்ட பணிகளை திட்ட அலுவலர் திலகவதி நேரில் ஆய்வு நடத்தினார். ஆய்வின் போது வெம்பக்கோட்டை யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) செல்வராஜன், ஒன்றிய பொறியாளர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story