வளர்ச்சி திட்ட பணிகள்
நீடாமங்கலம் ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
பூவனூர் ஊராட்சி தட்டி நீடாமங்கலம் பேரூராட்சி கொத்தமங்கலம் இடையே கோரையாற்றின் குறுக்கே நபார்டு வங்கி உதவியுடன் கட்டப்படும் இணைப்பு பாலம் பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணிகளையும், நீடாமங்கலம் திரவுபதையம்மன் கோவில் பகுதி, மாதா கோவில் பகுதி ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வளர்ச்சி பணிகள்
இதேபோல் நீடாமங்கலம் ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டு அய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது நீடாமங்கலம் ஒன்றியக்குழுத்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன், தாசில்தார் பரஞ்சோதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், நமச்சிவாயம், பேரூராட்சி தலைவர் ராம்ராஜ், பேரூராட்சி நிர்வாக அலுவலர் கங்காதரன், பூவனூர் ஊராட்சி தலைவர் மோகன் மற்றும் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர்கள் உடனிருந்தனர்.