தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில்-ரூ.17 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்


தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில்-ரூ.17 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
x
தினத்தந்தி 31 March 2023 6:45 PM GMT (Updated: 31 March 2023 6:45 PM GMT)

தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை

தேவகோட்டை

தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவையிலுள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ஊராட்சியின் சார்பில் 2022-2023-ம் நிதியாண்டில் ரூ.16.99 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மொத்தம் 496 வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக, பகுதிவாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சாந்தி, தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலதி, விஜயகுமார், உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story