வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 14 May 2023 6:45 PM GMT (Updated: 14 May 2023 6:45 PM GMT)

சிவகங்கை மற்றும் காரைக்குடி நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை மற்றும் காரைக்குடி நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு

சிவகங்கை நகராட்சி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் செட்டியூரணி புனரமைக்கும் பணிகள், ரூ.3.89 கோடி மதிப்பீட்டில் புதிய வாரச்சந்தை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் மற்றும் ரூ.1.95 கோடி மதிப்பீட்டில் பஸ் நிலையம் புனரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

மேலும் குண்டூரணி புனரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார். இதுதவிர முதல் அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் மஜீத் ரோட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சமையல் அறைக் கட்டிடம் கட்டுமானப் பணிகள், தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொருட்கள் மீட்பு மையக்கட்டிடம் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

பின்னர் அவர் கூறியதாவது.:-

உறுதிமொழி

சிவகங்கை நகராட்சியில் பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.8.கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து தரமான முறையில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

அதனைத்தொடர்ந்து, சிவகங்கை சாத்தப்பா ஊருணியில் தூய்மை நகருக்கான மரம் நடுதல் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது, சிவகங்கை நகர்மன்ற தலைவர்; .துரை ஆனந்த், நகராட்சி ஆணையாளர் பாண்டீஸ்வரி, நகர்மன்றத் துணைதலைவர் கார்கண்ணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காரைக்குடி

இதேபோல் காரைக்குடியில் பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளையும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகள் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பணிகள் தரமான முறையில் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் பேசினார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் ரமணன், உதவி பொறியாளர் சந்தோஷ் குமார், தாசில்தார் தங்கமணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story