சாத்தூரில் வளர்ச்சி திட்ட பணிகள்


சாத்தூரில் வளர்ச்சி திட்ட பணிகள்
x

சாத்தூரில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பஸ்நிலையத்தில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வாகன காப்பகம் மற்றும் சுகாதார வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து சாத்தூர் வெம்பக்கோட்டை சாலையில் புதியதாக அமைய உள்ள பஸ்நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட இடத்தை தேர்வு செய்யும் பணிகளை ஆய்வு செய்து, பணிகளின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். நகராட்சி ஆணையாளர் இளவரசன், நகர்மன்ற தலைவர் குருசாமி, மண்டல துணை வட்டாட்சியர் ராஜாமணி, சமூக நல பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

1 More update

Next Story