ரூ.74½ லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்


ரூ.74½ லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
x

பனப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வுசெய்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேரூராட்சியில் ரூ.74½ லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சியின் 2-வது வார்டில் உள்ள வேல்முருகன் நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.43 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து பெரியார் நகர் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31½ லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து பனப்பாக்கம் பேரூராட்சி திடக்கழிவு மையத்தை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தார். பின்னர் பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது பேரூராட்சி உதவி இயக்குனர் கணேசன், பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் அம்சா, பேரூராட்சி செயல் அலுவலர் குமார், பள்ளி தலைமை ஆசிரியை ஷர்மிளா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story