வளர்ச்சி திட்டப்பணிகள்


வளர்ச்சி திட்டப்பணிகள்
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:45 PM GMT)

சீர்காழி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்டப் பணிகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எடக்குடி வடபாதி ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வடபாதி கிராமத்தில் ரூ.13 லட்சம் செலவில் சாவடிக்குளம் தூர்வாரப்பட்டு புதிதாக படித்துறை, தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. இதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் சாந்தபுத்தூர் கிராமத்தில் மயான கொட்டகை இல்லாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய சிரமமாக உள்ளது. எனவே சாந்தபுத்தூர் கிராமத்தில் மயான கொட்டகை மற்றும் சாலை வசதி அமைத்து தர வேண்டும்.

நெல்கொள்முதல்

ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை புதிதாக தொடங்க வேண்டும். ஊராட்சியில் உள்ள நீர் நிலைகளை தூர்வார வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார்.

இதனை தொடர்ந்து காரைமேடு ஊராட்சிக்குட்பட்ட தென்னாலக்குடி கிராமத்தல் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர், சமையலறை கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுத்துறை ஊராட்சி

இந்த ஆய்வின் போது ஆணையர்கள் இளங்கோவன், சரவணன், பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சம்மாள் மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் தென்னரசு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, பணி மேற்பார்வையாளர் அபிராமி உள்பட பலர் உடனிருந்தனர். இதையடுத்து புதுத்துறை ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளையும் பார்வையிட்டார்.


Next Story