வளர்ச்சி திட்டப்பணிகள்


தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-14T00:16:47+05:30)

அளக்குடி ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

அளக்குடி ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்டப்பணிகள்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட பணிகள் மற்றும் ஊராட்சியில் கணக்குகள் குறித்து மயிலாடுதுறை கலெக்டர் லலிதா திடீர் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து ஊராட்சியில் நெல்களம் அமைக்கும் பணி, புதிய கட்டிடங்கள், கிராம சாலைகள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

கலெக்டர் ஆய்வு

அளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ,மாணவிகளின் கல்வித்திறன் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா பூர்ண சந்திரன், பலராமன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவபாலன் உள்பட பலர் உடன் சென்றனர்.


Next Story