வளர்ச்சி திட்டப்பணிகள்


வளர்ச்சி திட்டப்பணிகள்
x

வளர்ச்சி திட்டப்பணிகள்

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண் ராய் ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

நாகை மாவட்டம் மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலாளருமான அருண்ராய், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக நாகை சாமந்தான் பேட்டையில் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் குறித்து, செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் கேட்டறிந்தார். அதைதொடர்ந்து கீழ்வேளுர் வட்டார வள மைய அலுவலகத்தில் மகளிர் உதவி திட்ட அலுவலர்கள், பணியாளர்களின் பணி குறித்தும், சமுதாய வள பயிற்றுனர்கள், கண்காணிப்பாளர்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள், சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும், மகளிர் திட்டம் சார்ந்த பயன்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் மகளிர் சுய உதவிக் குழு சார்பில், சுய தொழில் வங்கி கடன் பெற்றவர்கள் நடத்தி வரும் கரும்புச்சாறு விற்பனை நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நீதிமன்றம் புனரமைக்கும் பணி

தொடர்ந்து நாகையில் பொதுப்பணித்துறை மூலம் நாகை மாவட்ட முதன்மை நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ரூ.7.90 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரதிவிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story