பாபநாசம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
பாபநாசம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
பாபநாசம் பேரூராட்சியில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாபநாசம் பேரூராட்சியில் பஸ் நிலையத்தில் போக்குவரத்து இடையூறுன்றி செயல்பட நடவடிக்கை குறித்தும், கழிவறை, காத்திருப்பு அறை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து பாபநாசம் பேரூராட்சியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக உள்ளதா என்றும், வாகனங்கள் வந்து செல்வதற்கு இடையூறுன்றி அமைக்கப்பட்டுள்ளதா போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் பொது வினியோகத் திட்டம் கூட்டுறவு அங்காடியில் உணவு பொருள் தரம் மற்றும் பொருட்கள் இருப்பு குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாபநாசம் பேரூராட்சியில் நடந்து வரும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின் போது பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ், செயல் அலுவலர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், சிவக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.