வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்


வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
x

வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஈரோடு

வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

உயர்மட்டக்குழு கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து உயர்மட்டக்குழு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார்.

ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், கல்வித்துறை, காவல்துறை, கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வளர்ச்சி திட்ட பணிகள்

மேலும், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் துரிதப்படுத்தி விரைவில் முடித்திடுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் சுதாகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது), கணேஷ் (வளர்ச்சி), செல்வராஜன், ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், கோபி ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினி, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உள்பட அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story