ரூ.1 கோடிக்கு வளர்ச்சி திட்டப்பணிகள்
ரூ.1 கோடிக்கு வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் மு.ெப.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
திருப்பூர்
வீ.மேட்டுப்பாளையம்
அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-2023-ல் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் பள்ளிகளுக்கு கழிவறை கட்டுதல், சேமிப்பு கிடங்கு கட்டுதல் ஆகிய பணிகள் ரூ.31 லட்சத்து 26 ஆயிரம் செலவில் நடைபெற உள்ளது. சடையப்பா நகரில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி ரூ.29 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற உள்ளது.
நாகமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.48 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளிகளுக்கு கழிவறை கட்டுதல் மற்றும் கான்கிரீட் சாலை போடுதல், உறிஞ்சு குழி அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளின் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தார்.
Related Tags :
Next Story