வளர்ச்சி பணிகளை பேரூராட்சிகள் இயக்குனர் ஆய்வு


வளர்ச்சி பணிகளை பேரூராட்சிகள் இயக்குனர் ஆய்வு
x

பள்ளிகொண்டாவில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை பேரூராட்சிகள் இயக்குனர் ஆய்வு செய்தார்.

வேலூர்

அணைக்கட்டு

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் நடைபெற்றுவரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் செல்வராஜ் ஆய்வு செய்தார். அப்போது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் வளம் மீட்பு பூங்காவை பார்வையிட்டார். பின்னர் சமுதாயக் கூடத்தில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளை பார்வையிட்டார். மேலும் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளையும் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வேலூர் மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஜீஜாபாய், செயற்பொறியாளர் அம்சா, பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி மற்றும் பேரூராட்சி செயற்பொறியாளர், அலுவலர்கள் உடனிருந்தனர்.

1 More update

Related Tags :
Next Story