சாத்தூரில் வளர்ச்சி பணிகள்


சாத்தூரில் வளர்ச்சி பணிகள்
x

சாத்தூரில் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சாத்தூரில் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாரிகள் ஆய்வு

சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் ரூ.43 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் குப்பைகளை தரம்பிரித்து கையாளும் மையத்தினை கலெக்டர் ஜெயசீலன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் அதிகாரிகள் குழு நகராட்சிக்கு சொந்தமான வளமீட்பு பூங்காவினை ஆய்வு செய்தது. தொடர்ந்து என்.சுப்பையாபுரத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் திருக்குறள் முற்றோதல் வகுப்பினை பார்வையிட்டனர்.

பின்னர் சாத்தூர் ஆர்.சி. தெரு, தென்வடல் தெரு, அண்ணாநகர், பெத்துரெட்டியபட்டி ஆகிய பகுதியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களை கள ஆய்வு அலுவலர்கள் விண்ணப்பதாரர்களின் வீட்டுக்கே நேரடியாக சென்று சரி பார்த்ததை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

காலை உணவு திட்டம்

இதேபோல் மருளுத்து அரசு நடுநிலைப்பள்ளி, பட்டம்புதூர் அரசு தொடக்கப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை கலெக்டர் ஜெயசீலன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது மகளிர் திட்ட இயக்குனர் பேச்சியம்மாள், சாத்தூர் ஆர்.டி.ஓ. சிவக்குமார், நகராட்சி ஆணையாளர் ஜெகதீஸ்வரி, நகராட்சி என்ஜினீயர் ரமேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story