ரூ.2 கோடியில் வளர்ச்சி பணிகள்


ரூ.2 கோடியில் வளர்ச்சி பணிகள்
x

காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திபட்டு, பெறுவளையம், சிறுவளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சிதுறையின் மூலம் நடைபெற்றுவரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணி, அங்கன்வாடி மைய கட்டிடம், சமையல் கூடம், ரேஷன் கடை கட்டுமான பணி ஆகியவற்றை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது திட்ட இயக்குனர் லோகநாயகி, வட்டார வார்ச்சி அலுவலர்கள் சைபுதீன், வெங்கடேசன். உதவி பொறியாளர் ஏகநாதன், சிறுவளையம் ஊராட்சி மன்ற தலைவர் ருக்மணி தயாளன், ஒப்பந்ததாரர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story