11 ஊராட்சிகளில் ரூ.23 கோடியில் வளர்ச்சி பணிகள்

ஒட்டன்சத்திரம் தொகுதியில் 11 ஊராட்சிகளில் ரூ.23 கோடியில் வளர்ச்சி பணிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மஞ்சநாயக்கன்பட்டி, தும்பலப்பட்டி, தேவத்தூர், சிக்கமநாயக்கன்பட்டி, கள்ளிமந்தையம், தாழையூத்து, நீலகவுண்டன்பட்டி, பொருளூர், கொத்தையம், வேலம்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய 11 ஊராட்சிகளில் ரூ.23 கோடியே 24 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ளது. இதில் தார்சாலை, சிமெண்டு சாலைகள், அங்கன்வாடிகள், சமுதாயக் கூடங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
அந்தந்த ஊராட்சிகளில் நடந்த விழாவில் அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்து பேசினார். அதன்படி, மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.5 கோடியே 25 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கான பணிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்து பேசினார்.






