பொள்ளச்சி தெற்கு ஒன்றியத்தில் ரூ.66 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள்


பொள்ளச்சி தெற்கு ஒன்றியத்தில் ரூ.66 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:45 PM GMT)

பொள்ளச்சி தெற்கு ஒன்றியத்தில் ரூ.66 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள உள்ளதாக ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பொள்ளச்சி தெற்கு ஒன்றியத்தில் ரூ.66 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள உள்ளதாக ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றிய குழு கூட்டம்

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய குழு கூட்டம் நேற்று கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் லட்சுமி தலைமை தாங்கினார். துணை தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பேசும் போது, எஸ். மலையாண்டிபட்டிணத்தில் கால்நடை மருந்தகம் இல்லை. இதனால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்நடைகளை அழைத்து செல்ல வேண்டி உள்ளது. தற்போது மாடுகளுக்கு அம்மை நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது.

இதனால் மாடுகள் இறந்து உள்ளன. எனவே கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் எஸ்.மலையாண்டிபட்டிணத்தில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும். ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

வளர்ச்சி பணிகள்

மேலும் கூட்டத்தில் தென்குமாரபாளையம் ஊராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிடம் கட்டுவது மற்றும் சிமெண்டு சாலை, சிறுபாலம், கான்கிரீட் சாலை, வடிகால் அமைத்தல், பொது கழிப்பிடம் பராமரிப்பு, பேவர் பிளாக் கற்கள் அமைத்தல் உள்பட 22 வளர்ச்சி பணிகள் ரூ.66 லட்சம் செலவில் மேற்கொள்ளுதல் உள்பட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்கள். கூட்டத்தில் ஆணையாளர் ஜென்கின்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் லதா மற்றும் அதிகாரிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story