சிவகாசி பகுதியில் வளர்ச்சி பணிகள்


சிவகாசி பகுதியில் வளர்ச்சி பணிகள்
x

சிவகாசி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாணிக்கம்தாகூர் எம்.பி. ஆய்வு செய்தார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாணிக்கம்தாகூர் எம்.பி. ஆய்வு செய்தார்.

எம்.பி. ஆய்வு

விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகாசி சட்டமன்ற தொகுதியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாணிக்கம் தாகூர் எம்.பி. நேற்று ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், விளாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராசாத்தி, காங்கிரஸ் பிரமுகர்கள் மீனாட்சிசுந்தரம், சின்னதம்பி, பைபாஸ் வைரகுமார், தர்மராஜ், முத்துமணி உள்பட பலர் உடனிருந்தனர்.

காங்கிரஸ் வெற்றி

முன்னதாக மாணிக்கம்தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயாத்த வேண்டும். ரெயில்வே திட்டங்களில் கூட மத்திய அரசு சிவகாசி, திருத்தங்கல், அருப்புக்கோட்டை பகுதிகளை புறக்கணிக்கிறது. இதை கண்டிக்கிறேன்.

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெறும். சிவகாசி மாநகராட்சிக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மனு கொடுத்துள்ளேன்.

மீண்டும் வாய்ப்பு

சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் பகுதியில் மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப ரெயில்வே மேம்பாலங்கள் அமையும். தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஆசைப்படலாம். எனக்கு கட்சி விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. தேர்தல் அறிவிக்கும்போது அதை பற்றி யோசிக்கலாம். இந்த தொகுதியில் துரை வைகோ போட்டியிட்டால் அதை நான் வரவேற்பேன். தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்.

வளர்ச்சி நிதிகள்

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக மூத்த அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் கூறி இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

ராகுல்காந்தி பிரதமர் ஆன பின்னர் தான் சிவகாசி பகுதிக்கு மத்திய அரசின் வளர்ச்சி நிதிகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story