தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்


தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்
x
தினத்தந்தி 13 March 2023 12:30 AM IST (Updated: 13 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் என்று பேசினார்.

தேனி

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், பொதுக்கூட்டம், தேனி அல்லிநகரத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மள்ளர்பாலா தலைமை தாங்கினார். இதில், கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

1952-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ராஜாஜி வந்த பிறகு தான் தேவேந்திர குல வேளாளர்கள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். சேர, சோழ, பாண்டியர்களாக வாழ்ந்த எங்கள் குல மக்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். எங்கள் உரிமையை எங்களுக்கு பெற்றுத்தர வேண்டும். தமிழ், தமிழ் என்று சொல்பவர்கள் இந்தி படிக்கக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால், அவர்களின் குழந்தைகள் இந்தி படிக்கிறார்கள். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அரசியல்வாதிகள் என்னை பழி வாங்கினார்கள். அரசியலில் நம்முடைய ஆதரவு வேண்டும் என்று நினைப்பவர்கள், நாம் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு செல்லக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். யாரும் மது குடிக்காதீர்கள். மதுவால் வீழ்ந்தவர்கள் அதிகம். பட்டியலில் இருந்து வெளியேற்ற மத்திய அரசால் தான் முடியும். வேறு யாரும் கொடுக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story