தேவி கருமாரியம்மன் கோவில் திருவிழா


தேவி கருமாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேவி கருமாரியம்மன் கோவில் திருவிழா

நீலகிரி

கூடலூர்

கூடலூர் தாலுகா தேவாலா அருகே கோட்ட வயல் தேவி கருமாரியம்மன் கோவிலில் வருடாந்திர திருவிழா, கடந்த 24-ந் தேதி தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமமும், 9 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 25-ந் தேதி மதியம் 12 மணிக்கு அம்மன், கணபதி, முருகன் உள்பட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகளும், மாலை 6 மணிக்கு மா விளக்கு பூஜையும் நடைபெற்றது.

நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு அம்பலக்கொல்லி முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து சீர் தட்டு மற்றும் கும்ப கலசங்களை எடுத்துக்கொண்டு ஏராளமான பெண்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story