பருவதமலையில் ஏறும்போது பக்தர் மூச்சுத் திணறி பலி


பருவதமலையில் ஏறும்போது பக்தர் மூச்சுத் திணறி பலி
x

பருவதமலையில் ஏறும்போது பக்தர் மூச்சுத் திணறி பலியானார்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

பருவதமலையில் ஏறும்போது பக்தர் மூச்சுத் திணறி பலியானார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட தென் மகாதேவமங்கலம், கடலாடி கிராமத்திற்கு இடையே மிகவும் பிரசித்தி பெற்ற தென் கைலாயம் என்று அழைக்கப்படும் பருவதமலை அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 568 உயரம் கொண்ட மலை உச்சியில் மல்லிகார்ஜுனேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.

பருவத மலைக்கு பவுர்ணமி மற்றும் வார விடுமுறை நாட்களில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு நேற்று முன்தினம் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் மலை மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் பருவதமலைக்கு வந்து கொண்டு வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நேற்று தூத்துக்குடியை சேர்ந்த பொன்னுசாமி வயது (வயது 40) என்ற பக்தர் உறவினர்கள் 4 பேருடன் மலை மீது ஏறி சென்று கொண்டிருந்தார்.

கோவில் அருகாமையில் வழியில் உள்ள ஏணிப்படி மீது செல்லும் பொழுது அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் ஏணிப்படியில் இருந்து இறங்கினார். இந்த நிலையில் மூச்சுத் திணறல் அதிகமான நிலையில் அவர் இறந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த கடலாடி போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த பக்தர்கள் உதவியுடன் பொன்னுசாமி உடலை மலையில் இருந்து கீழே இறக்கி கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த பொன்னுசாமி தூத்துக்குடியில் உள்ள துறைமுகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி பாமாருக்மணி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.


Next Story