சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி
சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது.
விருதுநகர்
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு இன்று (புதன்கிழமை) முதல் 24-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. அமாவாசை, பிரதோஷத்தையொட்டி இந்த அனுமதி வழங்கப்படுகிறது. காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்கு உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி கிடையாது. அதேபோல், காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். இரவில் தங்கவோ, நீேராடைகளில் குளிக்கவோ அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாளில் பலத்த மழை அல்லது நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகமானால் அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கூறினர்.
Related Tags :
Next Story