தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x

பழனி அருகே கோவில் திருவிழாவில், தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திண்டுக்கல்

பழனி அருகே பாப்பம்பட்டியில், பழமையான மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், குறும்பர் சமுதாய மக்கள் சார்பில் ஆடிமாத திருவிழா நடந்தது. இதையொட்டி குதிரையாறு அணையில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

விழாவில் ஆண், பெண் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் தலையில் கோவில் பூசாரி, தேங்காய்களை உடைத்து சிதறவிடுவதை பார்த்து பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். விழாவில் பாப்பம்பட்டி, குப்பம்பாளையம், வாடிப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story