பகவதி அம்மன் கோவிலுக்கு அக்னிசட்டி எடுத்து வந்த பக்தர்கள்
பகவதி அம்மன் கோவிலுக்கு அக்னிசட்டி எடுத்து வந்த பக்தர்கள்
திருச்சி
காட்டுப்புத்தூரில் உள்ள பகவதி அம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்து தேர் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்து பொதுமக்கள் தரிசனத்திற்காக திருத்தேர் காட்டுப்புத்தூரில் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. மாலையில் பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஆழ்த்துறை பிள்ளையார் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று(புதன்கிழமை) கிடா வெட்டு மற்றும் அம்மனுக்கு சந்தன காப்பு, மாவிளக்கு பூஜை நடைபெற்று, மஞ்சள் நீராடி கரகம் காவிரி ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Related Tags :
Next Story