வேளிமலை முருகன் கோவிலுக்கு பால்குடம் சுமந்து சென்ற பக்தர்கள்


வேளிமலை முருகன் கோவிலுக்கு பால்குடம் சுமந்து சென்ற பக்தர்கள்
x
தினத்தந்தி 2 Jun 2023 6:45 PM GMT (Updated: 2 Jun 2023 6:46 PM GMT)

வேளிமலை முருகன் கோவிலுக்கு பால்குடம் சுமந்தபடி பக்தர்கள் சென்றனர்.

கன்னியாகுமரி

தக்கலை,

வேளிமலை முருகன் கோவிலுக்கு பால்குடம் சுமந்தபடி பக்தர்கள் சென்றனர்.

பக்தர்கள் பால்குடம்

தக்கலை அருகே உள்ள குமாரகோவிலில் பிரசித்திபெற்ற வேளிமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு வள்ளிதேவியோடு அருள்பாலிக்கும் முருகபெருமானை தரிசனம் செய்வதற்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் தினமும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்த கோவிலின் முக்கிய விழாவில் ஒன்றான வைகாசி விசாக திருவிழா 10 நாட்களாக நடந்து வந்த நிலையில் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று வைகாசி விசாகம் என்பதால் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.

காலையில் சாமிக்கு தீபாராதனை, தொடா்ந்து கலசபூஜை, பூதபலி, சாமிகளுக்கு கோவில் தெப்பக்குளத்தில் ஆராட்டு, கோவிலில் கலச அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இவ்விழாவையொட்டி தக்கலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள 39 ஊர்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து பவனியாக குமாரகோவிலுக்கு சென்றனர். தக்கலை பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட பவனியை இந்து முன்னணி நிர்வாகி மிசா சோமன் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை இடும்பன் சேனா 39 ஊர் கமிட்டியினர் செய்திருந்தனர்.


Next Story