சேதம் அடைந்த கோவிலை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை


சேதம் அடைந்த கோவிலை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை
x

மீஞ்சூர் ஒன்றியம் ஆரணி ஆற்றங்கரையில் உள்ள சேதம் அடைந்த பழமைவாய்ந்த ஸ்ரீ ராமலிங்கீஸ்வரர் திருக்கோவிலை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ளது அத்தமனஞ்சேரி கிராமம். இயற்கை ஏழில் மிகுந்து இந்த கிராமத்தின் வழியாக ஆரணி ஆறு செல்கிறது. இந்த ஆற்றங்கரையில் பழமைவாய்ந்த ஸ்ரீ ராமலிங்கீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் ஆற்றங்கரையில் உள்ளதால் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது கோவில் அடிக்கடி சேதமடைகிறது. மேலும் அந்த கோவிலில் உள்ள பழமையான தூண்கள், கல்வெட்டுகள் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. தற்போது இந்த கோவில் பராமரிக்கப்படாததால் கோவிலின் சுவடுகள் மட்டுமே ஆங்காங்கே தென்படுகிறது. எனவே இந்த பழமை வாய்ந்த கோவிலை புனரமைத்து பக்தர்கள் வழிபாட்டுக்கு கொண்டுவர இந்து சமய அறநிலைத்துறையும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story