சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
விக்கிரமசிங்கபுரம்:
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
பூக்குழி இறங்கினர்
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தளவாய் மாடசாமி மற்றும் பட்டவராயன் சுவாமி, சங்கிலி பூதத்தார் கோவிலில் பக்தர்கள சங்கிலியால் தங்கள் மீது அடித்து வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
இரவில் கோவில் வளாகத்தில் மூன்று இடங்களில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. 10 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் பூக்குழி இறங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவினையொட்டி கோவிலை சுற்றி போலீசார், தீயணைப்புத்துறையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கலெக்டர் ஆய்வு
தொடர்ந்து பூக்குழி திருவிழா முடிவடைந்த நிலையில் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கோவிலுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த பக்தர்களிடம் கோவிலில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சிங்கம்பட்டி ஜமீன் ராஜாவின் மகனிடம் கோவில் திருவிழா எவ்வாறு நடைபெறுகிறது உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். பின்னர் பக்தர்கள் 2000 பேருக்கு மஞ்சப்பையில், நாட்டு பூ, கனி, மரக்கன்றுகளை வழங்கினார்.
இதில் சிறப்பு அதிகாரி சிவகிருஷ்ணமூர்த்தி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.