பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்


பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
x
தினத்தந்தி 8 Jun 2023 12:30 AM IST (Updated: 8 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நெய்க்காரப்பட்டியில் கோவில் திருவிழாவில் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கே.வேலூரில் மண்டு காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 5-ந்தேதி ெதாடங்கியது. விழாவில் நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் பழனி சண்முக நதியில் இருந்து அலகு குத்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நேற்று நடந்தது.

இதற்காக கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பூக்குண்டத்தில் காலை 7 மணிக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. முதலில் அம்மன் வேடமணிந்து ேகாவில் பெண் பூசாரி பூக்குழி இறங்கினார். அவரை தொடர்ந்து சுமார் 6 ஆயிரம் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பழனி, காவலப்பட்டி, கரடி கூட்டம், அய்யம்பாளையம், கரிகாரன்புதூர், பெரியம்மாபட்டி, நெய்க்காரப்பட்டி, அ.கலையமுத்தூர், சி. கலையமுத்தூர் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story