வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.14 லட்சம் உண்டியல் காணிக்கை


வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.14 லட்சம்  உண்டியல் காணிக்கை
x

வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் பக்தர்கள் ரூ.14 லட்சம் செலுத்தி இருந்தனர்.

வேலூர்

அணைக்கட்டு

வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் பக்தர்கள் ரூ.14 லட்சம் செலுத்தி இருந்தனர்.

பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவாணத்தில் உள்ளல்லையம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள்சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

ஏராளமான பக்தர்க் பணம், தங்கம், வெள்ளி போன்றவைகளை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்நிலையில், கடந்த 2 வாரத்திற்க்கு பிறகு எல்லையம்மன் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்தறையின் வேலூர் சரக ஆய்வரளர்கள் சுரேஷ்குமார், பாரி (குடியாத்தம்) ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

இதில், பக்தர்கள் ரூ.14 லட்சத்து 6 ஆயிரத்தை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 37 கிராம் தங்கம், 295 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

காணிக்கை எண்ணும் பணியில் விரிஞ்சிபுரம் மார்க்கப்பந்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ஸ்ரீதர், வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி, கணக்காளர் சரவணபாபு மற்றும் கோவில் ஊழியர்கள் உடனிருந்தனர்.


Next Story