முனியப்ப சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம்


முனியப்ப சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம்
x

குளிர்ந்தமலை முனியப்ப சுவாமி கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். திருவிழா

கரூர்

திருவிழா

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் குளிர்ந்தமலையில் பிரசித்தி பெற்ற முனியப்பசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிக்கழுவாடி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து கொண்டும், பூசாரி அரிவாள் மீது ஏறி நின்று கொண்டும் ஊர்வலமாக முனியப்பசுவாமி கோவிலுக்கு சென்றனர். பின்னர் சுவாமிக்கு பால் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து அபிஷேகம் நடந்தது.

திரளான பக்தர்கள்

தொடர்ந்து சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் முனியப்பசுவாமி, உற்வச மூர்த்தி திருவீதி உலா நடந்தது. அப்ேபாது வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலாயுதம்பாளையம் போலீசார் செய்திருந்தனர்.


Next Story