பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்


பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
x
தினத்தந்தி 25 Sept 2023 3:30 AM IST (Updated: 25 Sept 2023 3:30 AM IST)
t-max-icont-min-icon

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திண்டுக்கல்

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் உள்ளது. இங்கு சாமி தரிசனம் செய்ய வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். வாரவிடுமுறை, மாத கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.

அந்தவகையில் நேற்று வார விடுமுறை என்பதால், பழனியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக வெளியூர், கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்து தரிசனம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி சென்றனர். இதனால் மலைக்கோவில், பிரகாரங்கள், அடிவாரம், பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, யானைப்பாதை வழியில் திரளான பக்தர்கள் சென்றனர். மின்இழுவை ரெயில் வழியாக மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் ரெயில்நிலையத்தில் குவிந்ததால் டிக்கெட் கவுண்ட்டரை கடந்து பக்தர்கள் வரிசை காணப்பட்டது. கூட்டம் காரணமாக மலைக்கோவிலில் உள்ள பொது, கட்டளை, கட்டண ஆகிய தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்றனர். அவர்கள் சுமார் 1½ மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story