குணசீலம் பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்
குணசீலம் பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
திருச்சி
சமயபுரம், செப். 19-
திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது குணசீலம். இங்குள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பெருமாளை தரிசனம் செய்வதற்காக காலையில் இருந்தே திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.தொடர்ந்து அவர்கள் நீண்ட வரிசைகள் நின்று கோவிலுக்குள் சென்று பெருமாளை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி ஐயங்கார் தலைமையில் பணியாளர்கள் செய்து இருந்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்புவழிபாடு நடந்தது.
Related Tags :
Next Story