ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்


ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 7 Aug 2023 12:15 AM IST (Updated: 7 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாளான நேற்று ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது. அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் இருந்து இலவச தரிசன பாதை மற்றும் கட்டண தரிசன பாதையிலும் 3-ம் பிரகாரம், கிழக்கு வாசல் வரையிலும் பக்தர்கள் வரிசையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அந்த அளவுக்கு பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

வழக்கமாக சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு அமாவாசை நாட்கள் போன்று பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. அதேபோல் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை மற்றும் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story