இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள்


இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள்
x

ஆடி செவ்வாய்க்கிழமைையயொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.

விருதுநகர்

சாத்தூர்,

ஆடி செவ்வாய்க்கிழமைையயொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.

சிறப்பு வழிபாடு

சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் விருதுநகர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் பூஜையில் வழக்கத்தை காட்டிலும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இந்தநிலையில் ஆடி செவ்வாய்க்கிழமையான நேற்று மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நேர்த்திக்கடன்

அதேபோல எண்ணற்ற பக்தர்கள் அதிகாலை முதல் கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story