திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்; நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்; நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிழா மற்றும் விடுமுறை தினங்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சஷ்டி திதி, விசாகம் மற்றும் கிருத்திகை நட்சத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களிலும் பக்தர்கள் அதிகமாக வருவது வழக்கமாக உள்ளது.

சாமி தரிசனம்

நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்தனர்.

கடலில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Next Story