வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் பாதயாத்திரை


வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் பாதயாத்திரை
x

பட்டுக்கோட்டையில் இருந்து வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை;

மகாசிவராத்திரியை முன்னிட்டு பட்டுக்கோட்டையிலிருந்து தென் கைலாய பாதயாத்திரை குழுவினர் பாதயாத்திரையாக கோவை வெள்ளியங்கிரி மலைக்கு புறப்பட்டு சென்றனர். சிவராத்திரியையொட்டி பட்டுக்கோட்டை தென் கைலாய பக்தி பேரவை மற்றும் சிவாங்க பாதயாத்திரை குழுவினர் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பட்டுக்கோட்டை தேரடி தெருவில் இருந்து ஆதியோகி ரதத்துடன் வெள்ளியங்கிரி மலைக்கு பாத யாத்திரையாக புறப்பட்டனர்.தென் கைலாய பக்தி பேரவை கிழக்கு மண்டலம் சார்பில் ஆதியோகி ரதம் சுமார் 6 மாத காலமாக பட்டுக்கோட்டையில் உருவாக்கப்பட்டது. இந்த ரதத்தில் ஆதியோகி திருவுருவம், 63 நாயன்மார்கள், 18 சித்தர்கள், நால்வர் திருமேனிகள், பன்னிரு திருமுறைகளின் திருக்கோவில்கள் வைக்கப்பட்டுள்ளன.சிவ வாத்தியம் மற்றும் திருமறை திருமந்திரங்கள் ஓதப்பட்டன. சூரியனார் கோவில்குருமகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார். ஆதியோகி ரதத்துடன் சிவாங்கா மற்றும் தென் கைலாயபக்தி பேரவை தொண்டர்கள் பட்டுக்கோட்டை தேரடி தெருவில் இருந்து புறப்பட்டு சென்றனர்.


Next Story