மேல்மலையனூர் அருகேகாளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் ஊர்வலம்


மேல்மலையனூர் அருகேகாளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் ஊர்வலம்
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அருகே காளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் சென்றனா்.

விழுப்புரம்


மேல்மலையனூர்

மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் உள்ள ஸ்ரீகாளியம்மன் கோவிலில், ஆடி 3-வது வெள்ளியையொட்டி 108 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக கடைவீதியில் இருந்து பக்தர்கள் பால் குடம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை சென்றடைந்தனர். பின்னர், அங்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story