நெல்லிக்குப்பம் அருகே பாலமுருகன் கோவிலுக்கு காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


நெல்லிக்குப்பம் அருகே பாலமுருகன் கோவிலுக்கு காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் அருகே பாலமுருகன் கோவிலுக்கு காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினா்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அடுத்த சுந்தரவாண்டி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதுபோல் நேற்று காலை கெடிலம் ஆற்றில் பக்தர்கள் தங்கள் காவடிகளுக்கு பூஜை நடத்தினர். பின்னர் ஊர்வலமாக பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்துக் கொண்டும், உடலில் அலகு குத்தி சிறிய தேர்களை இழுத்துக்கொண்டும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

1 More update

Next Story