கைக்குழந்தைகளுடன் தீ மிதித்த பக்தர்கள்


கைக்குழந்தைகளுடன் தீ மிதித்த பக்தர்கள்
x

கைக்குழந்தைகளுடன் தீ மிதித்து பக்தர்கள் நேர்ததிக்கடன் செலுத்தினர்.

திருச்சி

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் இந்திரா நகரில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் 47-வது ஆண்டு சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 25-ந் தேதி தொடங்கிய இந்த விழா 5 நாட்கள் விமரிசையாக நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குடம் எடுத்து வந்து கோவில் முன்பு தீ மிதிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. அதன்படி கோரையாற்றிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம், பறவை காவடி, அக்னிசட்டி எடுத்தபடி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கு கோவிலுக்கு முன்பு தீ மிதித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கைக்குழந்தையை கையில் தூக்கியப்படி வந்து தீ மிதித்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) மாலையில் கருமாரியம்மன் வாண வேடிக்கைகளுடன் வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடக்க உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு குத்துவிளக்கு பூஜை நடக்கிறது.


Related Tags :
Next Story