முத்துமாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்


முத்துமாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்
x

முத்துமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் எமனேரி கரையில் உள்ள மகா முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. உலக நன்மை வேண்டி நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு காவடி, பூங்கரகம் எடுத்து ராஜவீதி வழியாக முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். பின்னர் அம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த பாலை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மனின் விக்ரகம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் வீடுதோறும் தீபாராதனை செய்து வழிபட்டனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி கமிட்டி தலைவர் நாகராஜன் நாட்டார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.


Next Story