மலை ஏறி தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்


மலை ஏறி தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்
x

மலை ஏறி பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நூர்சாகிபுரம் உள்ளது. இ்ங்குள்ள காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நூர்சாகிபுரம் பகுதி இளைஞர்கள் விரதம் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை மீது உள்ள காட்டழகர் என அழைக்கப்படும் சுந்தரராஜ பெருமாள் கோவில் அடிவாரத்தில் உள்ள நூபுர கங்கை என அழைக்கப்படும் தீர்த்த தொட்டியில் இருந்து தீா்த்தம் எடுத்து வந்தனர். 28 கிலோ மீட்டர் தூரம் இளைஞர்கள் பாதயாத்திரையாக சென்று எடுத்து வந்த தீர்த்த நீரை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Next Story