இன்று கார்த்திகை பவுர்ணமி - திருவண்ணாமலையில் 2-வது நாளாக கிரிவலம் சென்ற பக்தர்கள்...!
திருவண்ணாமலையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. மகா தீபத்தை தரிசிக்க திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மலையில் மகா தீபத்தை தரிசித்தபடி, விடிய விடிய கிரிவலம் சென்று வழிபட்டனர்.
இந்நிலையில், கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று காலை 8.14 மணிக்கு தொடங்கி, நாளை காலை 9.22 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. சிறப்பு பஸ்கள் இன்றும் இயக்கப்படுகிறது. மேலும், பக்தர்களின் வசதிக்காக நாளை வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொடர்ந்து 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story