விநாயகர் வடிவில் உருவான புற்று; பக்தர்கள் வழிபாடு
இடையக்கோட்டை அருகே விநாயகர் வடிவில் உருவான புற்றை பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
திண்டுக்கல்
இடையக்கோட்டை அருகே உள்ள நாரப்பநாயக்கன்பட்டியில் லட்சுமியம்மாள், அச்சம்மாள், சின்னலட்சும்மாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்தநிலையில் கோவில் வளாகத்தில் விநாயகர் வடிவில் புற்று ஒன்று தானாக உருவாகி இருந்தது.
இதனை பார்த்த பக்தர்கள் விநாயகர் வடிவிலான புற்றுக்கு மாலை அணிவித்தும், பால் ஊற்றியும், கற்பூரம் ஏற்றியும் வழிபாடு செய்தனர். மேலும் விநாயகர் வடிவில் புற்று உருவாகியுள்ள தகவல் பக்கத்து ஊர்களுக்கு பரவியது. இதையடுத்து அந்த கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் லட்சுமியம்மாள் கோவிலுக்கு வந்து புற்றை பார்த்து வழிபாடு செய்தனர்.
Related Tags :
Next Story