குடற்புழு நீக்க நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி


குடற்புழு நீக்க நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

குடற்புழு நீக்க நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஜெயசீலன் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அசோகன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார். இதில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் யசோதாமணி, தாசில்தார் லோகநாதன், துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன், கமிஷனர் சங்கரன், கவுன்சிலர் ஸ்ரீநிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story